திருக்கரத்தால் தாங்கி என்னை

திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் வனைந்திடுமே

1. உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும் – திருக்கரத்தால்

2. ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம் – திருக்கரத்தால்

3. அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே பெரிய மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்பக் கானான் தேசமதை – திருக்கரத்தால்



thirukkaraththal thangki ennai

thirukkaraththal thangki ennai
thirussithdham pol nataththidume
kuyavan kaiyil kaliman nan
anuthinamum vanainththidume

1. um vasanam thiyanikkaiyil
idhayamathil aarudhale
karirulil natakkaiyile
dheepamaka vazhi nataththum – thirukkaraththal

2. aazhkatalil alaikalinal
asaiyupothu en padakil
aathma nanpar iyesu unde
sernththiduven avar samukam – thirukkaraththal

3. avar namakkay jeevan dhanththu
alithdhanare periya meedbu
kankalinal kankirene
inpak kanan thesamathai – thirukkaraththal